உங்க சகவாசமே வேண்டாம்யா , எனக்கு கெட்ட பேர் வந்துரும் போலயே" - சொமேட்டோவுடன் ஒப்பந்தத்தை முறிக்கும் அனிருத் ?

language anirudh zomato
By Irumporai Oct 23, 2021 08:49 AM GMT
Report

 சொமேட்டோ நிறுவனத்திற்கு விளம்பரத் தூதராக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத அந்த பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சொமேட்டோ விவகாரம் பூதாகரமானது. அதற்குக் காரணம் சொமேட்டோ  ஊழியர் ஒருவரின் ஒரேயொரு பதில் தான்.  தேசிய பிரச்சினையாகியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஸ் என்பவர் ஆர்டர் செய்த உணவுகளில் ஒன்றை மட்டும் சம்பந்தப்பட்ட ஹோட்டல் அனுப்பவில்லை. இதையடுத்து சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தில் விகாஸ் புகாரளித்துள்ளார்.

அதற்கு எதிர்முனையிலிருந்த அந்த பெண் ஊழியர், "இந்தி தேசிய மொழி. உணவு ஆர்டர் செய்யும் எல்லோருக்கும் இந்தி கொஞ்சமேனும் தெரிந்திருக்க வேண்டும்" என பதிலளித்திருந்தார். இதனால் கோபடமடைந்த விகாஸ் சொமேட்டோ ஊழியர் சொன்னவற்றை ஸ்கிரின்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார்.

அவரின் பதிவு பயங்கரமாக வைரலாக அந்த ஊழியரை பணிநீக்கம் செய்ததாதாக சொமேட்டோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தமிழர்களின் பயன்பட்டிற்காக  தமிழ்‌ செயலியை உருவாக்குகிறோம்‌.

அதற்கான சந்தைப்படுத்தல்‌ முயற்சிகளை உள்ளூர் மயமாக்கியுள்ளோம்‌. எடுத்துக்காட்டாக நாங்கள்‌ தமிழ்நாட்டிற்கான விளம்பர தூதராக இசையமைப்பாளர் அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்‌" என்று குறிப்பிட்டிருந்தது

. இந்த நிலையில் zomato  விவகார்ம் தேசியளவில் பிரச்சினையதன்னுடையை பெயர் வந்ததால் அனிருத் அதிருப்தியடைந்துள்ளாராம். ஒருவேளை சொமோட்டோ விளம்பரத்தில் நடித்தால் தமிழர்கள் மத்தியில் அவப்பெயர் வருமென்பதால் விலக முடிவு செய்திருக்கிறாராம்.