மறைந்த வீரர் ஷேன் வார்னே குறித்த சுவாரஸ்ய நினைவுகளை பகிர்ந்த அணில் கும்ப்ளே

sachintendulkar anilkumbleshanewarne ripshanewarne
By Swetha Subash Mar 06, 2022 11:28 AM GMT
Report

மறைந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே முக்கிய ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் 52 வயதான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் நேற்று மாரடைப்பால் காலமானார்.

இந்த தகவல் கிரிக்கெட் உலகினர் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மறைந்த வீரர் ஷேன் வார்னே குறித்த சுவாரஸ்ய நினைவுகளை பகிர்ந்த அணில் கும்ப்ளே | Anil Kumble Shares Memories About Shane Warne

அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்த ஷேன் வார்னேவை மாலை 6 மணியளவில் ‘தாய் சர்வதேச மருத்துவமனைக்கு’ கொண்டு சென்றனர். 

அசைவின்றி கிடந்த அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க டாக்டர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கை கொடுக்காமல் போனதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், பல கிரிக்கெட் பிரபலங்கள், வார்னேவுடனான பல்வேறு நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

மறைந்த வீரர் ஷேன் வார்னே குறித்த சுவாரஸ்ய நினைவுகளை பகிர்ந்த அணில் கும்ப்ளே | Anil Kumble Shares Memories About Shane Warne

அந்த வகையில் இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே முக்கிய ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

 “வார்னேவுக்காக ஆஸ்திரேலிய அணி எப்படி செயல்படுகிறது என்பதில் சுவாரஸ்யமாக இருக்கும்.

களத்திற்கு செல்லும் எதிரணி பேட்ஸ்மேன் வார்னேவின் நண்பர் எனத் தெரிந்தால், அவரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியளவில் ஆஸ்திரேலிய வீரர்கள் அச்சுறுத்தல் கொடுக்க மாட்டார்கள்.

மிகவும் நட்பு ரீதியான போட்டி தான் அங்கு நடக்கும். ஒருமுறை நானும் பேட்டிங்கிற்கு சென்ற போது பார்ட்னர்ஷிப் அமைத்தேன். ஆனால் வார்னேவின் நண்பன் என்பதால் எனக்கு பெரியளவில் ஆஸ்திரேலிய வீரர்கள் வம்பிழுக்கவில்லை.

ஜாலியாக போட்டி நடந்தது. தனது நட்பு வட்டாரத்தை ஷேன் வார்னே இப்படி தான் பாதுகாப்போடு பார்த்துக் கொள்வார். பொதுவாக சச்சின் - வார்னே விளையாடுவது சுவாரஸ்யமாக இருக்கும்.

மறைந்த வீரர் ஷேன் வார்னே குறித்த சுவாரஸ்ய நினைவுகளை பகிர்ந்த அணில் கும்ப்ளே | Anil Kumble Shares Memories About Shane Warne

1998-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தபோது, முதல் இன்னிங்ஸில் சச்சினை வீழ்த்தி ஷேன் வார்னே சிறப்பாக ஆடினார்.

ஆனால் 2-வது இன்னிங்ஸில் வார்னேவை வீழ்த்தி சச்சின் சிறப்பாக விளையாடினார். இப்படி தான் எங்களின் நட்பு இருக்கும்” என அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.