இந்திய அணிக்கு இதுதான் இப்போ முக்கியமா தேவை : கும்ப்ளே புதிய அட்வைஸ்

Indian Cricket Team T20 World Cup 2022
By Irumporai Nov 15, 2022 09:08 AM GMT
Report

எதிர்காலத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட டெஸ்ட் போட்டி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கு தனித்தனி அணிகள் தேவை என்று இந்திய அணிக்கு கும்ப்ளே ஆலோசனை வழங்கியுள்ளார்.

சறுக்கலில் இந்திய அணி

இந்திய அணி மீது கடந்த சில நாட்களாக பல்வேறு விமர்சனங்கள் கூறப்பட்டு வருகின்றது. தற்போது ரோகித் தலமையிலான இந்திய அணி டி20 ஆசிய கோப்பை போட்டியில் வெற்றி பெறவில்லை .இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் அணியில் உள்ள சில வீரர்கள் ஒய்வு பெற வேண்டும் என கூறினார்.

இந்திய அணிக்கு இதுதான் இப்போ முக்கியமா தேவை : கும்ப்ளே புதிய அட்வைஸ் | Anil Kumble Advice Indian Team

இந்த நிலையில் , இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே , மூன்று விதமான கிரிக்கெட் போட்டிக்கும் மூன்று கேப்டன்கள் மற்றும் மூன்று அணிகள் நியமிக்கப்பட வேண்டும் என கூறினார்

கும்ப்ளே அட்வைஸ்

மேலும், (ஒருநாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கும் ரோகித் ஷர்மா கேப்டனாக உள்ளார். ரோகித் ஷர்மா உட்பட, விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அனைத்து வித கிரிக்கெட்டிலும் விளையாடுகின்றனர்.

இந்நிலையில் டி20, ஒருநாள் போட்டிக்கு தனித் தனி கேப்டன் மற்றும் தனித்தனி அணிகளை நியமிக்க வேண்டும். இந்திய அணிக்கு தனித்தனி அணிகள் மிகவும் முக்கியம்.

தற்போது இங்கிலாந்து அணி அப்படித்தான் உள்ளது. குறிப்பாக அணியில் அதிக ஆல் ரவுண்டர்கள் இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக பேட்டிங் ஆல் ரவுண்டர்கள் மிகவும் முக்கியம் என கூறினார்.