இந்தியாவின் முப்படைத் தளபதியாக அனில் சவுகான் பொறுப்பேற்றார்...!

India Lt Gen Anil Chauhan
By Nandhini 2 மாதங்கள் முன்

இன்று இந்தியாவின் முப்படைத் தளபதியாக அனில் சவுகான் பொறுப்பேற்றுள்ளார்.

அனில் சவுகான்

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நிலையில் அவரது பதவிக்கு அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டார்.

சமீபத்தில் இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் அனில் சவுகான் செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்தது.

அனில் சவுகான் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தடுப்பதில் திறம்பட பணியாற்றியவர். இவர் சுமார் 40 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றி லெப்டினென்ட் ஜெனரலாக ஓய்வு பெற்றவர்.

புதிய தலைமை தளபதியாக அனில் சவுகான் பொறுப்பேற்பு

இந்நிலையில், இந்திய நாட்டின் முப்படைகளின், புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் பொறுப்பேற்றார்.

முப்படைகளின், புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான், தன் தந்தை சுரேந்திர சிங் சவுகானுடன் சென்று தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் முப்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள அனில் சவுகாவிற்கு சமூகவலைத்தளங்களில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

anil-chauhan-india-commander-in-chief