விஜய் தான் எனக்கு க்ரஷ்; அனிகா ஓபன்டாக் - இனி.. அந்த நடிகையின் நிலைமை?
நடிகை அனிகா அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகை அனிகா
மலையாள சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்(18). தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து, அண்மையில் அனிகா முதன்முதலாக ஹீரோயினாக நடித்த 'ஓ மை டார்லிங்', புட்ட பொம்மா திரைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. தற்போது மலையாளத்தில் மாலு என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
யார் மீது க்ரஷ்?
மேலும், தமிழில் தனுஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அனிகா அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், எந்த ஹீரோ மீது க்ரஷ் என்ற கேள்விக்கு விஜய் தேவரகொண்டா மீதுதான் தனக்கு க்ரஷ் என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ ராஷ்மிகாவின் நிலைமை என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலித்துவருவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.