Wednesday, Apr 30, 2025

என்ன கிஃப்டா இருக்கும்?? ஆசையாக கிஃப்டை பிரித்த மணமகள் வைரலாகும் வீடியோ

marriage gift viralvideo
By Irumporai 4 years ago
Report

மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசுப் பொருளை பிரித்து பார்த்ததும் கோபமான மணப்பெண் அதை தூக்கி எறிந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

பொதுவாக நண்பர்களின் திருமணங்களின் போது மணமகன், மணமகளின் நண்பர்கள் அவர்களுக்கு வேடிக்கையான பரிசுபொருட்களை கொடுப்பார்கள். வெங்காய விலை உயர்ந்த போது மணமகனுக்கு வெங்காய மாலைகளை அணிவித்தனர்.

என்ன கிஃப்டா  இருக்கும்?? ஆசையாக கிஃப்டை பிரித்த மணமகள் வைரலாகும் வீடியோ | Angry When She Saw It He Video Went Viral

கொரோனா நேரத்தில் மாஸ்க்குகளையும் சானிடைசர்களையும் பரிசாக கொடுத்ததையும் சிலிண்டர் விலையேற்றத்தின் போது சிலிண்டரையும் நம்மாட்கள் பரிசாக கொடுத்ததை யாரும் மறக்கவில்லை.

அந்த வகையில் வடமாநிலத்தவரின் திருமண நிகழ்ச்சியில் மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசு பொருளை பார்த்து கோபமடைந்த மணப்பெண் அந்த பொருளை தூக்கிபோடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

அப்படி அந்த மணப்பெண்ணுக்கு என்னதான் கிப்ட் கொடுத்தார்கள் மணப்பெண் கோபம் அடைய காரணம் என்ன?

காரணம் இதுதான் மணமகளுக்கு கிப்ட் கொடுத்த நண்பர்கள் உடனடியாக அதை பிரிக்க சொல்கிறார்கள்.

ஆர்வத்துடன் பிரித்த பார்த்த மணமகள் அதை பார்த்தவுடன் கடுப்பாகிவிடுகிறார். காரணம் நண்பர்கள் கிப்ட்டாக கொடுத்தது குழந்தைக்கு பால் ஊட்டும் பாட்டிலை கொடுத்தனர்.

என்ன கிஃப்டா  இருக்கும்?? ஆசையாக கிஃப்டை பிரித்த மணமகள் வைரலாகும் வீடியோ | Angry When She Saw It He Video Went Viral

இதனால் வெட்க்கபட்டு கோபமான மணப்பெண் கொடுத்த பரிசு பொருளை அதை தூக்கி எறிந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.