ரொம்ப கஷ்டமா இருக்கு ...குடும்ப வாழ்க்கை பற்றி கேள்வி கேட்டதால் நிகழ்ந்த சம்பவம்
நடிகர் தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தின் நேர்காணல் ஒன்றில் வெளிநடப்பு செய்த வீடியோ இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த மாதம் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தளம் பக்கம் மூலம் அறிவித்தனர்.
இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இதுதொடர்பாக இருதரப்பு குடும்பமும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. '
இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த நேர்காணல் ஒன்றில் நடிகர் தனுஷ் வெளிநடப்பு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது. விஐபி 2 படம் தொடர்பாக தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தனுஷிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுசி லீக்ஸ் சர்ச்சை, குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. என் குடும்ப வாழ்க்கை பிரச்சனையில் இருக்கிறதா என்ற கேள்வி கேட்டபோது இது படத்தை பற்றிய பேட்டி தானே என்று கூறி பாதியில் எழுந்து சென்றுவிட்டார். பின் சில காலம் கழித்து தனுஷ் அந்த நிகழ்வு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் அன்று நான் அப்படி செய்துவிட்டேன். அந்த கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. ஆனால் அதற்காக நான் செய்தது தேவையில்லாதது. என் புதுப்படம் தொடர்பாக நான் இரண்டு வாரங்களாக தூங்கவில்லை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.