‘’மூதேவி ட்விட்டரை டாய்லெட்டாக்கி வச்சுருக்கீங்க’’ - கடுப்பான சித்தார்த்

twitter angry siddharth
By Irumporai Sep 12, 2021 04:04 PM GMT
Report

ட்விட்டரில் நீட் தேர்வு குறித்த ஒருவரின் கருத்துக்கு நடிகர் சித்தார்த் கடுமையாக பதிலளித்துள்ளார். தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்துடன் இருப்பவர் நடிகர் சித்தார்த், அதே சமயம் சமூகப்பிரச்சினைகள், அரசியல் நிகழ்வுகள் குறித்து அடிக்கடி ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருவார் நடிகர் சித்தார்த் .

இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ( 12.9.2021) மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் ட்விட்டரில் ஒருவர் நடிகர் சித்தார்த்தை டேக் செய்து நீட் தேர்வு நடப்பது குறித்து விமர்சனம் செய்து கேள்வி எழுப்பியிருந்தார்.

ட்விட்டர் வாசியின் பதிவு:

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கோபமாக ட்வீட் செய்துள்ள நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில் :

மூதேவி. கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன போய் கேளு. நான் என் வேலையத்தாண்டா பாக்கறன். பொறுக்கி பசங்க. இதுவே வேலையா போச்சு. ட்விட்டரை டாய்லெட்டாக்கி வச்சுருக்கீங்க.

வேற எங்க மலரும்? சாக்கடையிலதான் மலரும். எழவு.ஹிந்தில சொல்லட்டா? என கோபமாக பதிவிட்டுள்ளார்.