ரொம்ப கோபப்படுவீங்களா? அப்போ இந்த நோய்களுக்கு வாய்ப்பு அதிகம் - அதிர்ச்சி தகவல்!

United States of America India World
By Jiyath May 06, 2024 11:12 AM GMT
Report

கோபமடையும்போது திடீரென அதிகரிக்கும் ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல்; கதறிய பெண் எம்.பி - கும்பல் வெறிச்செயல்!

மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல்; கதறிய பெண் எம்.பி - கும்பல் வெறிச்செயல்!

உணர்ச்சி மாறுபாடுகள்

மனித நலனில் உணர்ச்சி மாறுபாடுகள் எவ்வாறு பிணைந்துள்ளன என்பது குறித்து கொலம்பியா பல்கலைக்கழகம், யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் நியூயார்க்கில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம் இனைந்து ஆய்வு நடத்தியது.

ரொம்ப கோபப்படுவீங்களா? அப்போ இந்த நோய்களுக்கு வாய்ப்பு அதிகம் - அதிர்ச்சி தகவல்! | Anger Increases Chances Of Heart Attack

இதில் 280 பேரை நான்கு குழுவாக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவுக்கும் கோபம், சோகம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை தூண்டும் நிகழ்வுகள் நினைவூட்டப்பட்டன. மேலும், அவர்களது ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுக்கு முன்னும்,

பின்னும் ரத்த ஓட்டம் மற்றும் ரத்த அழுத்தத்தை அளவீடு செய்தனர். அதில் சோகம், மகிழ்ச்சியை உணர்ந்தவர்களின் ரத்த நாளங்களின் விரிவாக்க திறனில் எந்த பாதிப்பும், மாற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.

அதிர்ச்சி தகவல் 

ஆனால் கோபமான உணர்ச்சியை உணர்ந்தவர்களின் ரத்த நாளங்களின் விரிவடையும் திறன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையில் "சிறிது நேரம் கோபம் கொள்வதுகூட ரத்த நாளத்தின் விரிவடையும் திறனை பாதித்து ரத்த ஓட்டத்தை கடினமாக்குகிறது.

ரொம்ப கோபப்படுவீங்களா? அப்போ இந்த நோய்களுக்கு வாய்ப்பு அதிகம் - அதிர்ச்சி தகவல்! | Anger Increases Chances Of Heart Attack

இந்த சூழல் மாரடைப்புக்கு வழிவகுக்கலாம். கோபமடையும்போது திடீரென அதிகரிக்கும் ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் போன்ற பிரச்னைகளை ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் இதயம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அனைவருக்கும் இந்த பிரச்னைகள் ஏற்படாது. அதனால் ஒருவர் கோபமே படக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது" என்று தெரிவித்துள்ளனர்.