செவ்வாய்-ராகு உருவாக்கும் ஆபத்தான யோகம் - இந்த 3 ராசிகள் வாழ்வில் புயல்!
செவ்வாய் பகவான் அங்காரக யோகத்தை உருவாக்கவுள்ளார்.
அக்டோபர் 27ஆம் தேதி முதல் விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ள செவ்வாய் பகவான் மகர ராசியின் 11 வது வீட்டில் அமர்ந்திருக்கிறார். அவர் கும்ப ராசியில் பயணித்து வரும் ராகுவுடன் இணைந்து அங்காரக யோகத்தை உருவாக்குகிறார். இந்த யோகத்தின் காரணமாக சில ராசிக்காரர்கள் அசுப பலன்களை அனுபவிக்க உள்ளனர்.

மகரம்
காரணம் இல்லாமல் சண்டை, தேவையற்ற வாக்குவாதங்கள், உறவுகளில் விரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மனம் ஒருவித பதற்றத்துடன் காணப்படும். இதன் காரணமாக அவசர முடிவுகளை எடுக்க நேரிடலாம். யோசிக்காமல் முடிவெடுப்பது பல பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே எந்த ஒரு செயலையும் டிசம்பர் 7ஆம் தேதி வரை நிதானமாக செய்ய வேண்டும்.
கும்பம்
குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்மை அல்லது வாழ்க்கைத் துணையுடன் தேவையில்லாத சண்டை, கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ரத்தம், தோல் சம்பந்தமான நோய்கள், உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
கடகம்
வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். வாகனங்களை இயக்கும் பொழுதும் தீ அல்லது ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுதும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.