ஒலிம்பிக் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலிருந்து விலகிய "சாம்பியன்" வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கிய ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நடந்த நிலையில் தற்போது ஒற்றையர் ஆட்டங்கள் நடக்க உள்ளது. இதனிடையே பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் விலகியுள்ளார்.
தொடையில் ஏற்பட்ட சிறிய சதை காயம் காரணமாக தான் வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார். நேற்று நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஜோ சலிஸ்பரியுடன் இணைந்து கனடா அணிக்கு எதிரான போட்டியில் ஆண்டி முர்ரே வெற்றிபெற்றார்.
ஆனால் ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே ஆடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால் அவர் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் முறையே லண்டன், ரியோவில் ஒற்றையர் பிரிவில் ஆண்டி முர்ரே தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan