ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் Gmail, Youtube இயங்காது - வெளியான அதிர்ச்சி தகவல்

Youtube Gmail Android Version
By Thahir Oct 19, 2021 04:54 AM GMT
Report

ஆண்ட்ராய்டு வெர்சன் 2.3.7 ஸ்மார்ட் போன்களில் இனி ஜிமெயில்,யூடியூப் இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை கூகுள் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பயனர்கள் கூகுள் ட்ரைவ், கூகுள் அக்கவுண்ட், ஜிமெயில் மற்றும் யூடியூப் ஐ தங்கள் போன்களில் அணுக முடியாது.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் Gmail, Youtube இயங்காது - வெளியான அதிர்ச்சி தகவல் | Android Version Gmail Youtube

ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 அல்லது அதற்கும் குறைவான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஜிமெயில், யூ டியூப் உள்ளிட்ட சேவைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 27 முதல் அந்த போன்களில் கூகுள் சேவைகள் நிறுத்தப்படும். பயனர்கள் குறைந்தபட்சம் 3.0 Honeycomb ஆண்ட்ராய்டு பதிப்பை கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளது.

இருப்பினும் பழைய பதிப்புகளை கொண்ட யூஸர் மற்றும் ஜிமெயில் அக்கௌன்ட் உலாவி மூலம் அணுக முடியும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.