பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் உயிரிழப்பு - ரசிகர்கள் கண்ணீர்..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவன் ஷேன் வார்ன் மாரடைப்பால் காலமானார். தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மற்றொரு ஜாம்பவன் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சைமண்ட்ஸ் இரவு 10.30 மணியளவில் ஒரு கார் விபத்தில் சிக்கியதாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
காரை ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தனியாக ஓட்டிச் சென்றுள்ளார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்து உருண்டு விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
46 வயதாகும் சைமண்ட்ஸ், ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 1999 - 2007ம் ஆண்டுகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் உலகை ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியபோது அந்த அணியின் முக்கிய தூணாக சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வந்தார்.