கழுத்தைத் தாக்கிய பவுன்சர் - மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர்

andrefletcher Bangladeshpremierleague BPL2022
By Petchi Avudaiappan Jan 26, 2022 12:32 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே பிளெட்சர் குல்னாவை பவுன்சர் பந்து தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வங்கதேச பிரீமியர் லீக் தொடர் கடந்த ஜனவரி 21 ஆம் தேதியிலிருந்து நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் சட்டாக்ராம் சேலஞ்சர்ஸ் மற்றும் குல்னா டைகர்ஸ் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 190 ரன்கள் அடிக்க 191 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டைகர்ஸ் அணி 165 ரன்கள் அடித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  

இந்த போட்டியில் டைகர்ஸ் அணியில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ஃப்ளெட்சர் 16 ரன்களுடன் களத்தில் இருந்தபோது  ரிஜார் ரஹ்மான் ராஜா என்ற பவுலர் வீசிய பவுன்ஸர் பந்தில் கழுத்தில் பயங்கரமாக அடிவாங்கினார். ஹெல்மெட்டின் கீழ் பகுதியில் படாமல், அதற்கும் கீழாக ஃப்ளெட்சரின் கழுத்தில் அடித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

வலியால் சுருண்டு விழுந்த ஃப்ளெட்சர் உடனடியாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவருக்கு கன்கஷன் மாற்றாக சிக்கந்தர் ராஜா களமிறங்கினார். ஃப்ளெட்சருக்கு பயப்படும்படியாக பெரும் பாதிப்பு எதுவுமில்லை என்று அந்த அணியின் ஃபிசியோ தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 25 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஆண்ட்ரே ஃப்ளெட்சருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.