நடிகை ஆண்ட்ரியா டி- சர்ட் உள்ளே கைவிட்ட நபர் - அவரே சொன்ன பரபரப்பு தகவல்
நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த கொடுமையினை வெளிப்படுத்தியுள்ளார்.
அறிமுகம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான இவர், பின்னர் படிப்படியாக திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் “அனல் மேலே பனித்துளி” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
டி- சர்ட் உள்ளே கைவிட்ட நபர்
இதனிடையே ஆண்ட்ரியா அளித்த பேட்டி ஒன்றில், தனது தோற்றத்தினை வைத்து நான் நகரத்து மாடர்ன் பெண் என்று பலரும் நினைக்கிறார்கள்.ஆனால் அரக்கோணத்தில் ஒரு சிறிய டவுனில் வளர்ந்து ஒரே ஒரு அறை இருந்த வீடு, பின் இரண்டு அறைகள் இருந்த வீடு, அதன்பின் ஒரு அப்பார்ட்மெண்ட் என்று வாடகைக்கு இருந்து, தற்போது அப்பார்ட்மெண்ட்டை சொந்தமாக வாங்கி படிப்படியாக வளர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் நான்.
நான் இதுவரை 2 முறை தான் பேருந்தில் பயணம் செய்துள்ளேன். வேளாங்கண்ணிக்கு 11 வயதில் சென்ற போது யாரோ என் முதுகில் கை வைப்பது போல இருந்தது. திடீரென அந்த கை என் டி-சர்ட் உள்ளே சென்றதும் பயந்து போய் இருக்கையில் சற்றுமுன்னே அமர்ந்து கொண்டேன்.
அதனைப் போல கல்லுாரிக்கு ஒரு முறை பேருந்தில் சென்ற போதும் நடந்தது. இதனால் அன்றே முடிவு செய்துவிட்டேன் இனி பேருந்தில் செல்லக் கூடாது என்று.
பேருந்தில் செல்ல வேண்டாம் என்ற வாய்ப்பு எனக்கு இருந்தது போல, பல பெண்களுக்கு அமைவதில்லை.
இது போல அத்துமீறல்கள் பற்றிதான் அனல் மேலே பனித்துளி திரைப்படம் பேசியிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
