குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா - "ஓ” போடும் ரசிகர்கள்
நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகை ஆண்ட்ரியா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். தமிழ் சினிமாவிலேயே டாப்லெஸ் ஆக நடித்து மிரட்டிய அவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அந்த வகையில் 36 வயதாகும் நடிகை ஆண்ட்ரியா பாத் டப்பில் நுரைகளையே ஆடையாக மாற்றி குளிக்கும் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து ரசிகர்களையும் பிரபலங்களையும் திகைக்க வைத்துள்ளார்.
குறிப்பாக ஆண்ட்ரியா ஆடைகள் இல்லாமல் குளிக்கும் போட்டோஷூட்டை நடத்தி உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.அதற்கு முன்பு தான் குழந்தை பருவத்தில் செம க்யூட்டாக நின்று ரசித்து பார்க்கும் புகைப்படத்தை நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டு ஏகப்பட்ட லைக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.