ஆந்திரா மாநிலத்தில் டிராக்டர் விபத்தில் 5 கூலி தொழிலாளர்கள் பலி

accident death tractor peoples
By Praveen May 04, 2021 06:00 PM GMT
Report

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே மீன் குட்டையில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஐந்து கூலி தொழிலாளர்கள் பலி.

ஆந்திர மாநிலம் நெல்லூர் ரூரல் மண்டலம் கோரகண்டுகுரு கிராமத்தில் தர்பூசனி பழங்கள் அறுவடை செய்வதற்காக கூலித் தொழிலாளர்கள் டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகமாக சென்றுகொண்டிருந்த டிராக்டர் அருகில் இருந்த மீன் குட்டையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட 5 கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியானவர்கள் கிருஷ்ணவேணி 26, ஹரிபாபு 43, லக்ஷ்மீ காந்தம்மா 45, பென்சிலய்யா 60, வெங்கடரமணம்மா 19 ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இது குறித்து தகவல் அறிந்த நெல்லூர் ரூரல் எம்எல்ஏ ஸ்ரீதர் ரெட்டி சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உயிரிழந்தவர்கள் சடலத்தை நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

ஆந்திரா மாநிலத்தில் டிராக்டர் விபத்தில் 5 கூலி தொழிலாளர்கள் பலி | Andra Tractor Accident 5Peoples Dead

ஆந்திரா மாநிலத்தில் டிராக்டர் விபத்தில் 5 கூலி தொழிலாளர்கள் பலி | Andra Tractor Accident 5Peoples Dead