ஆந்திராவிற்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொடுத்தது இதற்காகத்தான்: விளக்கம் கொடுத்த ராதாகிருஷ்ணன்
தமிழகத்திற்கே ஆக்சிஜன் தேவை இருக்கும் நிலையில் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதற்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் அதிகளவு பாதிப்பு இருந்து வரும் சூழலில், இங்கிருந்து ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்: மற்ற மாநிலங்களில் இருந்து ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் நமக்கு வருகிறது அவசர தேவைகளின் போது இதுபோல அண்டை மாநிலங்களுக்கு உதவுவது வழக்கம் தான்.
மற்ற மாநிலங்களில் இருந்து ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் நமக்கு திருப்பி விடப்படுகின்றன, எனக் கூறினார்.