ஆனந்தய்யா தயாரிக்கும் மருந்தை ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக வழங்க எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை..!
நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணா பட்டினத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் நாட்டு மருந்து வழங்கும் இடத்தை ஆய்வு செய்து உடனடியாக நோயாளிகளுக்கு மருந்து தயாரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபட்டினம் நாட்டு மருந்து வழங்கும் இடத்தை எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆய்வு செய்தனர். அப்போது தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த மல்லா ரெட்டி என்ற இளைஞர் கொரோனா தொற்று ஏற்பட்டு சுவாச பிரச்சினையோடு வந்திருந்தார். இதனை கவனித்த ஆனந்தயா குடும்பத்தினர் அவருக்கு கண்ணில் நாட்டு சொட்டு மருந்து இட்டனர். இதனை அடுத்த 15 நிமிடத்தில் அந்த இளைஞன் எழுந்து நின்று சுவாசக்கோளாறு இல்லை என்றும் இப்பொழுது ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ஆந்திர மாநில அரசு உடனடியாக ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த நாட்டு மருந்து தயாரித்து வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. சோமி ரெட்டி, ஆனந்தய்யா தயாரிக்கும் மருந்தை ஆயுஷ் அங்கீகரித்துள்ளது என்றும், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனடியாக இந்த மருந்தை இலவசமாக ஏழை எளிய நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.
