பெண் வேடமிட்டு குடும்ப பெண்களை ஏமாற்றி நகை பறிப்பு - ஆண்டி ஹீரோ கைது! என்ன நடந்தது? யார் இவன்?
பெண் வேடமிட்டு குடும்ப பெண்களை ஏமாற்றி நகை பணத்தை திருடி செல்லும் காதல் ஆண்டி ரோமியோ போலீசார் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்த ரங்கசாமி வேலை தேடுவது போல ஐதராபாத்தில் உள்ள லாலகுடா பகுதிக்கு சென்றுள்ளான். அங்கு தங்கி வேலை தேடுவதற்கு பதிலாக அக்கம் பக்கத்தில் வசிக்கும் திருமணமான பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் மோசடி வேலைகளை செய்துள்ளான்.
அறிமுகமாகும் அனைத்து பெண்களின் வீட்டுக்கு சென்று, அவர்களது உடையை அணிந்து பெண் போல வேடமிட்டு பெண்களை மயக்குவதை வழக்கமாக கொண்டுள்ளான்.
தனது காதல் வலையில் சிக்கும் பெண்களிடம் உடலுறவு வைத்துகொண்டு நெருக்கமான புகைப்படம் எடுத்து வைத்து, பிறகு அதனை வைத்து மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளான்.
லாலகுடாவில் இதே போல் ஒரு பெண்ணை ஏமாற்றியதாக, ரங்கசாமி மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவங்கள் அம்பலமானது.
தனது மோசடி வேலைக்காக திருமணமான சம்பாதிக்கும் பெண்களை குறி வைத்து, நண்பன் போல பழகி, கணவனிடம் இருந்து விவாகரத்து பெற செய்து பணம் பறிக்கும் கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளான்.
10க்கும் மேற்பட்ட குடும்ப பெண்களில் வாழ்க்கையை சீரழித்த ரங்கசாமி, ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கோவாவுக்கு ஹனிமூன் சென்ற போது, ஐதராபாத் அவனை மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவன் மீது இதுவரை பாலியல் பலாத்காரம், செயின் பறிப்பு உள்ளிட்ட 12 வழக்குகள்
நிலுவையில் உள்ளன.