மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க என்ன செய்யலாம்? இதோ சில எளிய வழிமுறைகள்.

Stress health tips Mental awareness
By Anupriyamkumaresan May 29, 2021 02:29 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in ஆரோக்கியம்
Report

இன்றைய காலக்கட்டத்தில் பலரை பாதிக்கம் ஒரு நோயாக மன அழுத்தம் உள்ளது.

மன அழுத்தம் என்பது ஒரு பெரிய பிரச்சனை, இது மனதளவில் மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.ஏனெனில் அதிக மன அழுத்தம் உடையவர்களுக்கு மாரடைப்பும், இருதய நோயும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே இவற்றை முடிந்தவரை குறைப்பத நல்லது. அந்தவகையில் மன அழுத்தத்தை எப்படி எளிய முறையில் குறைக்க முடியும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணுங்கள்.இதனால் மனச் சிந்தனை வேறு பக்கம் செலுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும்.

அடிக்கடி மன அழுத்தம் அடைபவர்கள் தியானத்தைப் பழகிக் கொண்டு தினசரி தியானம் செய்தல் அவசியம் நாம் இருக்கும் இடத்திலோ நாம் பயணம் செய்யும் பொழுதோ தியானம் செய்யலாம்.

மன அழுத்தம் உடையவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

தியானம் செய்ய விருப்பமில்லாதவர்கள் அவர்கள் மத கடவுளை நினைத்து வழிபட்டு உட்கார்ந்திருக்கலாம்.

முன் நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே ஒரு ஒளி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதன் மீது கவனம் செலுத்தியவாறு உட்கார்ந்து இருக்கலாம்.

டென்ஷன் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம். நல்ல காற்றோட்டமுள்ள சூரியனைப் பார்த்த அறையில் தூங்குவதும் அவசியம். முறையான மற்றும் சரியான நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். உடல் உழைப்பு முறையான தூக்கத்தை உண்டாக்கும்.

எந்த செயல் பாட்டிலும் வேகத்தைத் தவிர்த்து விவேகமாகச் செயல்பட்டால் டென்ஷனைத் தவிர்க்கலாம். சிந்தித்து பொறுமையாக திட்டம் தீட்டி நேரம் ஒதுக்கி செயல்பாடுகளைச் செய்தால் மனம் அமைதி பெறும் டென்ஷன் ஏற்படாது.