சமூக ஊடகம் மூலம் பழகி 100க்கும் மேற்பட்ட பெண்களை வன்கொடுமை செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
ஆந்திராவில் சமூக ஊடகத்தின் மூலம் பழகி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களுக்கு தெரியாமல் வீடியோ போட்டோ எடுத்து பணம், நகை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோதட்டூரை சேர்ந்த பிரசன்ன குமார் சிறு வயதிலேயே போதைக்கு அடிமையாகிய நிலையில், பி.டெக் முதலாம் ஆண்டு படிப்பை பாதியில் நிறுத்தி பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுப்பட்டுவந்தார்.
அவர் மீது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடப்பா, விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தில் பிரசன்ன குமார் ஷேர் சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பெண்களை குறிவைத்து, காதல் மாய வலையில் விழவைத்து அவர்களுடன் பாலியல் ரீதியாக தனிமையில் இருந்துள்ளார்.
அப்போது அந்த பெண்களுக்கே தெரியாமல் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து அதனை வைத்து பிளாக்மெயில் செய்து அவர்களிடமிருந்து கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் மற்றும் நகைகளை பறித்து உல்லாசமாக வாழ்ந்து வந்தான்.
பிரசன்ன குமாரின் மாய வலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஏமாற்றப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த தகவல் வெளியே தெரிந்தால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அவப்பெயர் ஏற்படும் என்பதால் எந்த பெண்களும் புகார் செய்ய முன்வரவில்லை.
2019 ஆம் ஆண்டில், கிரிக்கெட் பந்தய வழக்கிலும் திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டி பணத்திற்காக 2020 ல் விஜயவாடா போலீசாரும் பிரசன்னகுமார் மீது வழக்கு இருப்பதால், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.