உண்டியலில் ரூ.100 கோடி; ஆடிப்போன நிர்வாகம் - பக்தருக்கு வலைவீச்சு!

Andhra Pradesh
By Sumathi Aug 25, 2023 04:36 AM GMT
Report

கோயில் உண்டியலில் பக்தர் ஒருவர் ரூ.100 கோடி காணிக்கை செலுத்தியுள்ளார்.

கோயில் உண்டியல்

ஆந்திரா, விசாகப்பட்டினத்தில்சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வாடிக்கை.

உண்டியலில் ரூ.100 கோடி; ஆடிப்போன நிர்வாகம் - பக்தருக்கு வலைவீச்சு! | Andhra Temple Receives Rs 100 Crore Cheque

அதன்படி, அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் போது, உண்டியலில் இருந்த காசோலை ஒன்றை எடுத்து பார்த்துள்ளனர். அதில் 100 கோடி ரூபாய்க்கு கோயில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது.

ரூ.100 கோடி

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் உள்ள தகவல்களின் படி பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை என்பது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் வங்கிக்குச் சென்று பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு குறித்த தகவல்களை கூறினர்.

உண்டியலில் ரூ.100 கோடி; ஆடிப்போன நிர்வாகம் - பக்தருக்கு வலைவீச்சு! | Andhra Temple Receives Rs 100 Crore Cheque

அப்போது அவரது கணக்கில் ரூ.17 மட்டும் இருப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதனையடுத்து, தற்போது காசோலையை காணிக்கையாக போட்டவரின் தகவல்களை கண்டறியும் முயற்சியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.