என்ஐடி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை
suicideattempt
NITTrichy
studentdied
sowmyadhevi
kakkinada
andhrastudent
By Swetha Subash
என்ஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த 22 வயதான மாணவி சௌமியா தேவி ,திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி பிடெக் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு பபடித்து வந்தார்.
தடகள வீராங்கனையான மாணவி, நேற்று விடுதியில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.