அமைச்சர் ரோஜா கார் மீது தாக்குதல்... உதவியாளர் மண்டை உடைந்தது... - ஆந்திராவில் பரபரப்பு...!

Roja Andhra Pradesh
By Nandhini Oct 17, 2022 06:26 AM GMT
Report

ஆந்திராவில், ரோஜா உள்ளிட்ட அமைச்சர்களின் கார்கள் மீது பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியினர் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ரோஜா கார் மீது தாக்குதல்

ஆந்திராவிற்கு 3 தலைநகரங்களை வலியுறுத்தும், விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் வந்த ரோஜா உள்ளிட்ட அமைச்சர்களின் கார்கள் மீது பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியினர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில், பவன் கல்யாணை வரவேற்க காத்திருந்த அவரது கட்சி நிர்வாகிகளை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், ஏற்பட்ட பிரச்சினையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

andhra-pradesh-rooja

உதவியாளர் மண்டை உடைந்தது

இத்தாக்குதலில் அமைச்சர் ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.

விமான நிலையத்தில் வெளியே இருந்த பொருட்களையும் கலவரக்காரர்கள் சேதமாகினர். இது தொடர்பாக போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஜனசேனா கட்சி நிர்வாகிகள் 25 பேரை கைது செய்தனர்.