பள்ளியில் நடந்த ஹோலி பண்டிகை..மாணவிகளிடம் அத்துமீறிய தலைமையாசிரியர் -நடந்தது என்ன?
பள்ளியில் நடந்த ஹோலி பண்டிகை கொண்டாத்ததில் மாணவிகளிடம் தலைமையாசிரியர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றது.
அப்போது மாணவிகள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு சென்ற அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடபதி கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறி இருக்கிறார்.
இந்த காட்சிகளை அப்பள்ளிக்கு அருகில் உள்ளவர்கள் சிலர் வீடியோ எடுத்து மாணவிகளின் பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தலைமை ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் தலைமை ஆசிரியர் வெங்கடபதியைக் கைது செய்த காவல்துறை விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.