சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு 'முன்னாள் முதல்வர்' மனநல சிகிச்சை பெற வேண்டும் - நடிகை ரோஜா!
2024 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் மனநல சிகிச்சை பெற வேண்டும் என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா பேசியுள்ளார்.
அமைச்சர் ரோஜா
ஆந்திர மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. இவர் நேற்று காக்கிநாடா மாவட்டம் சமல் கோட்டில் உள்ள சாளுக்கிய குமார ராம பீமேஸ்வர சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது "வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.
சிகிச்சை பெறுங்கள்
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் தோல்வி அடைவார்கள். தோல்வி அடைந்த பிறகு இருவரும் மனநல கோளாறுகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.
ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக சாமியிடம் பிரார்த்தனை செய்தேன். ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்" என ரோஜா கூறினார்.