ஆக்சிஜன் இல்லை! பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை- நெஞ்சை உருக்கும் சோகம்
ஆந்திர மாநிலத்தில், கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒன்றரை வயது சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் இடம் இல்லாத நிலையில் ஆம்புலன்சில் மரணமடைந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள அச்சுதாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒன்றரை வயது சிறுமி ஜான்விதா.
கொரோனா தொற்றுக்கு உள்ளான சிறுமி ஜான்விதாவை பெற்றோர் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு இருந்த கொரோனா வார்டில் படுக்கை காலியாக இல்லை. எனவே சுமார் 2 மணி நேரம் ஆம்புலன்சில் காக்க வைக்கப்பட்ட சிறுமிக்கு அங்கேயே ஆக்சிசன் கொடுக்கப்பட்டது.
ஆனால், சிறுமி ஜான்விதா பரிதாபமாக மரணமடைந்தார். தங்களுடைய மகள் பரிதாபமாக மரணம் அடைந்ததை பார்த்து கொண்டிருந்த பெற்றோர் அலறி அழுத காட்சி பார்த்து கொண்டிருந்தவர்களை கண்கலங்க செய்துள்ளது.