மாரடைப்பால் மயங்கி விழுந்த நபர் - CPR சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய காவலர் - வைரலாகும் வீடியோ...!

Viral Video Andhra Pradesh
By Nandhini Oct 20, 2022 10:51 AM GMT
Report

ஆந்திராவில், மாரடைப்பால் மயங்கி விழுந்த நபருக்கு CPR சிகிச்சை அளித்து காவலர் ஒருவர் உயிரை காப்பாற்றியுள்ளார்.

உயிரை காப்பாற்றிய காவலர்

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆந்திரா மநிலம், அமராவதியில் விவசாயிகள் மகாபாதயாத்திரை மேற்கொண்டனர்.

அப்போது, பாதயாத்திரையின்போது திடீரென கூட்டத்தில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அப்போது, விவசாயிக்களுக்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர் ஒருவர் ஓடிவந்து, மயங்கி விழுந்திருந்த நபருக்கு CPR சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் காவலருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

andhra-pradesh-cpr-viral-video