ஓடும் ரயிலில் விபரீத முடிவெடுத்த புதுமண தம்பதி - வீடியோ வைரல்!

Andhra Pradesh Married Death Railways
By Sumathi Dec 22, 2025 04:33 PM GMT
Report

ஓடும் ரயிலில் இருந்து புதுமணத் தம்பதி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம்

ஆந்திரா, ராவு பள்ளி கிராமத்தை சேர்ந்த 25 வயதான கொரடா சிங்காசலமும், 19 வயதான பவானியும் இரண்டு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

ஓடும் ரயிலில் விபரீத முடிவெடுத்த புதுமண தம்பதி - வீடியோ வைரல்! | Andhra Newlywed Couple Suicide Video Viral

தொடர்ந்து காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். இதற்கிடையே செகந்திராபாத் வந்த இருவரும்,அங்கிருந்து விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்றனர்.

ரயில் பயண கட்டணம் உயர்வு - எவ்வளவு தெரியுமா?

ரயில் பயண கட்டணம் உயர்வு - எவ்வளவு தெரியுமா?

தம்பதி தற்கொலை

அப்போது ரயிலில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரயில் வங்கலப்பள்ளி ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது இருவரும் ரயிலில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்.

தற்போது ரயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இருவரும் ரயிலில் பயணித்த போது சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.