3வதாக பிறக்கும் பெண்குழந்தைக்கு இனி ரூ.50,000 - எம்பி அறிவிப்பு!
3-வது குழந்தை பெற்றடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
3-வது குழந்தை
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த விஜயநகரம் தொகுதி எம்.பி., காளிசெட்டி அப்பலநாயுடு , பெண்கள் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.
அதில் பேசிய அவர், மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு வழங்கப்படும். 3வதாக பெண் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பசு மாடும் பரிசாக வழங்குவேன்.
சலுகை அறிவிப்பு
நிதியுதவியை எனது சம்பளத்தில் இருந்து வழங்குவேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு, மக்கள் தொகை குறித்து கவனம் செலுத்த வேண்டும். தென் மாநிலங்களில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
வட மாநிலங்களில் மட்டும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்கள் தொகை அதிகமாக இருந்தால் தான், பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கும்.
மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.