‘வாடா என் மச்சி...வாழைக்காய் பஜ்ஜி’- இந்திய அணியை புரட்டியெடுத்த ஆண்டர்சன்
2வது டெஸ்டில் தன்னால் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து அணி வீரர் ஆண்டர்சன் இந்திய அணியை பழி தீர்த்துக்கொண்டார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டைப் போல மளமளவென சரிந்தது.
ரோகித் சர்மா, ரஹானே ஆகிய இருவரைத் தவிர மற்ற யாருமே இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. குறிப்பாக யாருமே 20 ரன்களை கூட தொடவில்லை என்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவமாக அமைந்து விட்டது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஆண்டர்சன் 8 ஓவர்கள் பந்து வீசி 5 ஓவர்களை மெய்டனாக்கி 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கடந்த டெஸ்ட் போட்டியில் அவரின் தனிப்பட்ட பழிவாங்கல்கள் இங்கிலாந்து அணியை தோல்வியை நோக்கி அழைத்து செல்ல காரணமாக அமைந்தது.
அதற்கெல்லாம் சேர்த்து ஆண்டர்சன் இந்திய அணியை வட்டியும் முதலுமாக பழிதீர்த்துள்ளார்.