“வயசெல்லாம் ஒரு மேட்டரா?” - 39 வயதில் ஆண்டர்சன் செய்த செயல்
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் 31வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன்மூலம் 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
அதேபோல் 1951 ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக அதிகமான வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக 5 முறை களமிறங்கி அதில் 4 முறை 5 விக்கெட்டுகளை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார். இங்கு அதிகப்பட்சமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் இயான் போத்தம் 8 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Food recipe: உளுந்து சாதத்திற்கு எள்ளு துவையல்- இதுவரையில் யாரும் செய்யாத பக்குவத்தில் செய்ய தெரியுமா? Manithan
