4வது முறையாக மாடு மீது மோதி சேதமான வந்தே பாரத் ரெயில்
கடந்த மாதம் 29- ம்தேதி மும்பை காந்திநகர் குஜராத் வரை இயக்கப்படும் வந்தே பாரத் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வந்தே பாரத் ரயில் விபத்து
காலை 8.15மணியளவில் அதுல் ரெயில்வே நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் ஒரு பசுமாடு ஒன்று காயமடைந்துள்ளதாகத் இந்திய ரெயில்வே தெரிவித்தது.
உடனடியாக அதிகாரிகள் வந்து சேதமடைந்த பகுதியை சரிசெய்தனர். இதனால் ரெயில் மீண்டும் புறப்பட்டுச் செல்வதற்கு 15நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.
நான்காவது முறை விபத்து
இந்தநிலையில், நேற்று இரவு மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் விரைவு ரெயில் அரக்கோணம் சந்திப்பு அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் ரெயிலின் முன்பக்கம் லேசாக சேதமானது. ரெயிலில் அடிப்பட்டு கிடந்த கன்றுக்குட்டியை ஊழியர்கள் அகற்றினர்.
சிறிது நேரம் நிறுத்தப்பட்ட ரெயில், மீண்டும் சென்னை நோக்கி இயக்கப்பட்டது.
சென்னை மைசூர் வரை இயங்கும் 5வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நவம்பர் 11ஆம் தேதிபிரதமர் மோடி துவங்கி வைத்தார் தற்போது 4 வது முறையாக மாடு மீது மோதி வந்தே பாரத் ரயிலானது விபத்துக்குள்ளானது.