தொன்மை வாய்ந்த மொழி தமிழ் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

Government of Tamil Nadu Government Of India K. Ponmudy
By Thahir Dec 02, 2022 06:59 AM GMT
Report

தொன்மை வாய்ந்த மொழி தமிழ் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி தொன்மையான மொழி

சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு,

தமிழ் மொழி தொன்மையான மொழி. அனைத்து நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கூறினார்.

Ancient Language Tamil - Union Minister Kiran Rijiju

மேலும், சாமானியர் புரியும் வகையில் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக மாநில மொழி இருக்க வலியுறுத்தப்படும்.

மாநில மொழியில் வழக்காடல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்காடல்களை சாமானியர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார். இவ்விழாவில் ஆளுநர் ரவி, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றுள்ளனர்.