நிலத்தை தோண்டும் போது கிடைத்த பழமை வாய்ந்த தங்கப் புதையல்!

gold ground Telangana ancient
By Jon Apr 10, 2021 03:29 AM GMT
Report

தெலுங்கானாவில் பெம்பார்த்தி கிராமத்தில் தனி நபருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை தோண்டும்போது தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டத்தில் பெம்பார்த்தி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் நரசிம்மாலு என்பவருக்குச் சொந்தமான 11 ஏக்கர் நிலம் உள்ளது.

அந்த நிலத்தை சமன்படுத்துவதற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராதவிதமாக பழங்காலத்தைச் சேர்ந்த தங்கப் புதையில் நிறைந்த செம்பு பானை ஒன்று நிலத்தில் கிடைத்துள்ளது. அந்த செம்பு பானைக்குள் காதணி, மூக்குத்தி, கொலுசு உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் இருந்திருக்கின்றன.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்கம் 1.727 கிலோ மற்றும் வெள்ளி 187.54 கிராம் செம்பு பானையில் இருந்தது உறுதியானது. தங்கப் புதையல் அப்பகுதியில் முன்னோர் காலத்திலிருந்த கோயிலைச் சேர்ந்தது எனக் கருதிய அக்கிராம மக்கள், அப்பகுதியில் ஒன்று திரண்டு தேங்காய் உடைத்து, பூ வைத்து வழிப்பட்டார்கள்.

நிலத்தை தோண்டும் போது கிடைத்த பழமை வாய்ந்த தங்கப் புதையல்! | Ancient Gold Treasure Found While Digging Ground

அதனையடுத்து, அம்மாவட்ட ஆட்சியரிடம் அந்த மொத்த புதையலும் ஒப்படைக்கப்பட்டன. அந்த தங்கப் புதையல் எவ்வளவு ஆண்டு பழைமை வாய்ந்தது என்பது பற்றி அறிய தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.