தொகுப்பாளினி DD-க்கு அந்த தொழிலதிபருடன் 2வது திருமணமா..? - சகோதரி சொன்ன தகவல்!
தொகுப்பாளினி டிடி-யின் இரண்டாம் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவரது சகோதரி பிரியதர்ஷினி.
திவ்யதர்ஷினி
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார்.
குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய 'காபி வித் டிடி' நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது. சில தமிழ் படங்களிலும் டிடி நடித்துள்ளார். தற்போது வார நிகழ்ச்சிகளையும், முக்கிய நிகழ்ச்சிகளையும் டிடி தொகுத்து வழங்கி வருகிறார்.
தொகுப்பாளினியாக மட்டும் அல்லாமல் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். டிடிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், தொழிலதிபர் ஒருவருடன் இரண்டாம் திருமணம் நடக்கப்போகிறது என்று அடிக்கடி வதந்திகள் வெளியாவது வழக்கம்.
இரண்டாம் திருமணமா?
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் அதற்கு பதிலளித்த டிடி-யின் சகோதரி பிரியதர்ஷினி "நாங்களும் அதைத்தான் கேட்கிறோம். ஏதோ தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று வதந்திகள் வரும்.
யாருப்பா அந்த தொழில் அதிபரு? எங்களுக்கே பார்க்கணும் போல இருக்கே என்று தோன்றும். எத்தனை பேருக்குத்தான் நாங்கள் பதில் சொல்வது. முதல்முறை அதை கேட்கும்போது கோவம் வந்தது. போகப்போக அதைப்பார்த்து பழகி பழகி, சிரிப்புதான் வருகிறது.
இதற்கு நாங்கள் என்ன பதில் சொல்ல முடியும். இப்போ எனக்கு திருமணம் என்றால், எல்லாரிடமும் திருமணம் என்று சொல்லப்போகிறேன், அவ்வளவுதானே" என்று பேசியுள்ளார்.