சிறுமியாக இருக்கும்போதே 'கிளப்பிற்கு' சென்றேன்; அப்பா அனுப்பி வைத்தார் - மதுப் பழக்கம் குறித்து பேசிய டிடி!

Tamil Cinema Dhivyadharshini Tamil Actress
By Jiyath Aug 11, 2023 06:22 PM GMT
Report

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது அப்பா குறித்து பேசியுள்ளார்.

திவ்யதர்ஷினி

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார். குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது.

சிறுமியாக இருக்கும்போதே

சில தமிழ் படங்களிலும் டிடி நடித்துள்ளார். தற்போது வாரநிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சானெல் ஒன்றிற்கு இவர் பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் தனது அப்பா குறித்து டிடி பேசியுள்ளார்.

பேட்டி

அவர் பேசுகையில் 'என்னுடைய அப்பா மிகவும் அறிவானவர், கடின உழைப்பாளியும் கூட. எதையுமே முடியாது என்று சொல்லமாட்டார். நான் என்னுடைய டீனேஜிலேயே அதாவது 16,17 வயதாக இருக்கும்போது கிளப்பில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று அம்மாவிடம் சொன்னேன், ஆனால் அம்மா என்னை அனுமதிக்கவில்லை.

சிறுமியாக இருக்கும்போதே

அதே சமயம் அப்பாவிடம் சொன்னேன் அவர் என்னை அனுமதித்தார். ஏனென்றால் அப்பாவிற்கு நம்பிக்கை இருந்தது என்ன பண்ணினாலும் நான் குடிக்க மாட்டேன் என்று. இன்று வரையில் என்னை சுற்றி ஒரு 100 பேர் குடித்தாலும் நான் குடிக்க மாட்டேன் என்று டிடி பேசியுள்ளார்.