மருத்துவர் ராமதாஸை சாதிய வட்டத்திற்குள் சுருக்கப்பார்க்கிறார்கள் - அன்புமணி ராமதாஸ் வேதனை
மருத்துவர் ராமதாஸ் வந்த பிறகுதான் வட தமிழகம் அமைதியாக உள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புத்தக வெளியீட்டு விழா
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதிய போர்கள் ஓய்வதில்லை என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று(15.12.2024) சென்னையில் நடைபெற்றது.
இந்த புத்தகத்தை வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெளியிட, தொழிலதிபர் வி.ஜி சந்தோஷம் பெற்றுக்கொண்டார்.
அன்புமணி ராமதாஸ்
இந்த நிகழ்வில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "பாமகவிடம் 6 மாத காலம் அரசு அதிகாரம் இருந்தால் போதும் எவ்வளவோ நல்ல திட்டங்களை தமிழ்நாட்டுக்கு நிறைவேற்றித் தருவோம். எந்த ஆறு, ஏரி எங்கே உள்ளது, எந்த ஏரியை இணைக்க வேண்டும் என்பதில் நாங்கள் Phd முடித்துள்ளோம்.
மகாத்மா காந்தியை போல் அம்பேத்கரும் ஒரு தேசிய தலைவர். ஆனால் அவரை பட்டியல் இனத்துக்கான தலைவர் போல சுருக்குகிறார்கள். அதே போல் மருத்துவர் ராமதாஸ் ஈழத் தமிழர்களுக்காகவும் உலகத் தமிழர்களுக்காகவும் எத்தனையோ பல நல்ல விஷயங்களை செய்திருக்கின்றார். இந்திய அளவில் பல்வேறு சமுதாயங்களுக்காக குரல் கொடுத்து பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த தலைவர்.
ராமதாஸ்
எந்த சமுதாயத்துக்கு பிரச்னை என்றாலும் முதலில் வந்து நிற்பவர் அவர்தான். 30 ஆண்டுகளுக்கு முன்பு வட தமிழ்நாடு கலவரம், வெட்டுகுத்து, அடிதடி என்று இருக்கும். ஆனால் ஐயா வந்த பிறகு தான் அமைதியாக மாறி உள்ளது. ஆனால் அவரை சாதிய வட்டத்திற்குள் அடைக்க பார்க்கிறார்கள். இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடி வருகிறோம்.
ஆனால் எத்தனையோ போராட்டங்கள் செய்த ஐயாவுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. ஐயா ராமதாஸை அங்கீகரிக்கவில்லை என்றாலும் கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும்" என பேசினார்.