தமிழ்நாட்டின் பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் : அன்புமணி ராமதாஸ் பேச்சால் சர்ச்சை

Anbumani Ramadoss PMK
By Irumporai Apr 27, 2023 03:39 AM GMT
Report

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் தான் என பா.ம.க கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பா.ம.க பொதுக்கூட்டம்

 சின்னாளபட்டியில் நடைபெற்ற பாமக 2.0 என்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி நேற்று பேசினார். அதில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மதுபான கூடம் என்றால் அது சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் தான் என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் : அன்புமணி ராமதாஸ் பேச்சால் சர்ச்சை | Anbumani Says Chepauk Ground Is Biggest Bar

   மதுபானக்கூடம் சேப்பாக்கம்

திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அவர்களுடைய கொள்கை பூரண ,மதுவிலக்கு என்றும் ஆனால் இன்று திமுக ஆட்சி அதனை செயல்படுத்துகிறதா என்றும் கேள்வி எழுப்பினார், ஏற்கனவே விளையாட்டு மைதானம் உள்பட பல பகுதிகளில் மதுபானங்கள் பரிமாற அனுமதி என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு கடுமையாக அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.