உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!

Anbumani Ramadoss Tamil nadu PMK Chennai Madras High Court
By Jiyath Nov 24, 2023 08:13 AM GMT
Report

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம் 

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், உயர் நீதிமன்றம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்! | Anbumani Ramadoss Protest In Chennai Hight Court

இதில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது "சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

'சேரி மொழி’ சர்ச்சை: நடிகை குஷ்பு வெளியில் நடமாட முடியாது - காங்கிரஸ் எச்சரிக்கை..!

'சேரி மொழி’ சர்ச்சை: நடிகை குஷ்பு வெளியில் நடமாட முடியாது - காங்கிரஸ் எச்சரிக்கை..!

கேவலமாக நினைக்கின்றனர்

அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. தாய் மொழியிலேயே விவாதம் செய்தால் அது உணர்வுபூர்வமாக இருக்கும். அலகாபாத் நீதிபதி கூட தமிழை கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்! | Anbumani Ramadoss Protest In Chennai Hight Court

ஆனால் தமிழகத்திலோ தமிழில் பேசுவதை கேவலமாக நினைக்கின்றனர். எங்கும் 'தமிழ்', எதிலும் 'தமிழ்' என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் அது பேச்சில்தான் உள்ளது" என்று அவர் பேசியுள்ளார்.