சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!
சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
திருநெல்வேலி மாவட்டத்தில் பேத கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் "சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள். உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது.
ரூ.6000 போதாது
இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது. வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுத்த வேண்டும்" என்றார். மேலும் பேசிய அவர் "மத்திய அரசு நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும்.
நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது. மீட்பு, நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுபடுத்த வேண்டும். ரூ.6000 வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது" என்று தெரிவித்துள்ளார்.