தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!
பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தேமுதில தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்துத்து வாழ்த்து பெற்றார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவர் அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்தி வாழ்த்து பெற்று வருகிறார்.
அந்த வகையில் தற்போது சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்ற அன்புமணி ராமதாஸ் விஜயகாந்தை சந்தித்தி பேசி அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், கட்சி பாகுபாடுகளை கடந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கவேண்டும் என்ற அடிப்படையில் தேமுதிக தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும்,
மேலும், பாமகவின் வளர்ச்சிக்காக 2.0 என்ற புதிய செயல்திட்டத்தை தீட்டி தமிழகம் முழுவதும் கட்சியை வளர்க்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.