இந்த மரணங்களுக்கு திமுக ,அதிமுக தான் காரணம் : கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss ADMK DMK PMK
By Irumporai May 16, 2023 03:37 AM GMT
Report

கள்ளச்சாரயம் குடித்து பலர் உயிரிழந்ததற்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

13 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் எக்கியர் குப்பம் எனும் மீனவ கிராமத்தில் கள்ளசாராயம் குடித்து இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், பலருக்கு இன்னும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

 இருகட்சிகள்தான் காரணம்

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கள்ளச்சாராய மரணத்திற்கு திமுக மட்டும் காரணமல்ல திமுக , அதிமுக இரண்டு கட்சிகளும் தான் தான் காரணம்.

இந்த மரணங்களுக்கு திமுக ,அதிமுக தான் காரணம் : கொந்தளித்த அன்புமணி ராமதாஸ் | Anbumani Ramadoss Has Blamed Dmk And Aiadm

இந்த கள்ளச்சாரயமானது வருடக்கணக்கில் நடமாட்டத்தில் இருந்துள்ளது. விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளிகளை மது இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழலில் இரு கட்சிகளும் மாற்றிவிட்டன என கடுமையாக குற்றம் சாட்டினார்.