‘‘தண்ணீர் பற்றாக்குறையை தடுப்பதற்கு தான் அதிமுக வாஷிங்மெஷின் கொடுக்கவுள்ளனர்’’- அன்புமணி ராமதாஸ் விளக்கம்
தண்ணீர் பற்றாக்குறையை தடுக்கவே இலவசமாக வாஷிங்மெஷின் வழங்கப்படும் என அதிமுக அறிவித்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், எங்களுக்கு பதவி ஆசை இல்லை. அப்படி இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருப்போம் என கூறிய அன்புமணி.

உலக வெப்பமயமாதலால் காரணமாக ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவே வாஷிங்மெஷின் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், சாதரணமாக துணி துவைக்க 100லிட்டர் தண்ணீர் தேவை என்றால் வாஷிங் மெஷின் மூலம் துணி துவைத்தால் 10 லிட்டர் தண்ணீர் போதும்” எனவும் அன்புமணி தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.