ரெட் அலர்ட்.. ஒரு துளி மழை இல்லை.. இதுதான் உங்க கணிப்பா? அன்புமணி ராமதாஸ் தாக்கு!
ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தில் அன்புமணி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
அன்புமணி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. நேற்று இரவு முதல் தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தற்போது இந்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பல்வேறு பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இன்று அதிக கனமழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விளக்கம் அளித்த வானிலை நிபுணர் பாலச்சந்திரன், ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால், அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் 20 செ.மீ
மேல் மழை பெய்யும் என அர்த்தமில்லை என்றும், நாளை கரை அருகே வரும்போது மழை பெய்யும் வாய்ப்பை கருத்தில் கொண்டும், ஏற்கனவே இருந்த மழை அளவை கருத்தில் கொண்டும்
ரெட் அலர்ட்
ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.அதிகனமழை என எச்சரிக்கை விடுத்து மக்களை பீதியில் ஆழ்த்திய சென்னை வானிலை ஆய்வு மையத்தின்
செயலால் சென்னைவாசிகள் அதிருப்தி அடைந்தனர். அந்த வகையில், பா.ம.க., தலைவர் அன்புமணி, வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று மாலை வரையில் ஒரு துளி கூட மழையைக் காணவில்லை.
வானிலை நிலவரத்தை துல்லியமாக கணித்து, தகவலை வெளியிட்டால் மட்டுமே, பொதுமக்களும், அரசாங்கமும் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார்