தேசியக் கல்வி கொள்கையை தமிழில் வெளியிடாதது வருத்தமே - அன்புமணி ராமதாஸ் வருத்தம்
புதிய தேசியக் கல்வி கொள்கை 17 மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில் தமிழில் வெளியாகாதது பெரும் வருத்தத்தை அளித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .
மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையானது தற்போது 17 மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில்,அது தமிழ் மொழியில் வெளியிடப்படாதது பெரும் வருத்தத்தை அளித்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை ஆவணம் கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ் மொழியில் இந்த ஆவணம் வெளியிடப்படவில்லை. மேலும் புதிய தேசிய கொள்கையில் இடம்பெற்ற பல கொள்கைகளில் தமிழகத்தில் கடக்கும் எதிர்ப்பு இருந்தது. இருந்தபோதும் தற்போது இந்த கொள்கைகள் தேசிய மையம் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது அதனை தமிழ் மலய்யிலும் வெளியிட வேண்டும்.
அதன்படி எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் புதிய தேசியக் கல்விக் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக எட்டாவது அட்டவணை மொழிகளில் அதிக அளவிலான மக்களால் பேசப்படும் தமிழ் மொழியில் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
அதை மத்திய அரசு செய்யத் தவறியதை நியாயப்படுத்த முடியாது. மத்திய அரசின் தமிழ் மொழிக்கு எதிரான இந்த அணுகுமுறை தவறானது. இந்தத் தவறை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.