மறுபடியும் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றுங்க : அன்புமணி வேண்டுகோள்

anbumani vanniyarreservation
By Irumporai Mar 31, 2022 06:48 AM GMT
Report

தமிழக அரசின் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்தான நிலையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் பிரிவினருக்கான 10.5சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.

இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் உள்ஒதுக்கீடை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை தற்போது விசாரித்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீட்டிற்கு சரியான காரணங்கள் இல்லை என கூறி உள்ஒதுக்கீடு ரத்து செல்லும் என உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

தமிழ்நாடு அரசு உடனடியாக புள்ளி விவர தகவல்களோடு மீண்டும் உள்ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.