பெரியாரை கொள்கைரீதியாக விமர்சிக்கலாம்; ஆனால் அரைகுறை புரிதலுடன்..அன்புமணி காட்டம்!

By Vidhya Senthil Jan 11, 2025 07:22 AM GMT
Report

 பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அவரை கொள்கைரீதியாக விமர்சிக்கலாமே தவிர அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 பெரியாரின் கொள்கை

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க கலைஞர் அரசு மறுத்த போது, அதைக் கண்டித்ததுடன், அரசுக்கு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீடு 31% ஆக உயர்த்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் பெரியார். அதனால் தான் அவரை கொள்கை வழிகாட்டியாக பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றிருக்கிறது.

anbumani condemns defaming speech about periyar

தமது கொள்கையில் உறுதியாக இருந்தாலும் தம்மைத் தேடி வந்தவர்களின் உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் மதித்தவர். தமது வீட்டுக்கு வந்த திருவிகவின் நம்பிக்கையை மதித்து, அவர் இட்டுக் கொள்வதற்காக திருநீறு சம்படத்தை ஏந்தி வந்தவர் அவர்.

பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?அப்பட்டமான இரட்டை வேடம் - அன்புமணி அட்டாக்!

பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?அப்பட்டமான இரட்டை வேடம் - அன்புமணி அட்டாக்!

1927ஆம் ஆண்டு குடி அரசு இதழைத் தொடங்கிய போது முதல் இதழிலேயே வள்ளலாரின் வரிகளை பயன்படுத்தியவர் அவர். வள்ளலார் சத்திய ஞானசபைக்கு சென்ற போது, அங்கு ‘‘கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’’ என எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் ‘‘நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன்.

அன்புமணி

உள்ளே வர மாட்டேன்’’ என மறுத்தவர் பெரியார். அவரது வரலாறும், சாதனைகளும் மிக நீண்டவை. அவற்றை முழுமையாக படிக்காமல், அரைகுறை புரிதலுடன் அவற்றை விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவரது புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறுகளால் ஒருபோதும் மறைக்க முடியாது.

anbumani condemns defaming speech about periyar

பெரியாரை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அவரை கொள்கைரீதியாக விமர்சிக்கலாம்; மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது.

இந்த அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்து கொண்டு அனைவரும் அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் கூறியுள்ளார்.