அன்புமணி பின்னால் பாமக; 2வது நாளாக புறக்கணிப்பு - நெருக்கடியில் ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் 2வது நாளாக ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கட்சியின் தலைவரான அன்புமணி கலந்து கொள்ளவில்லை.
மேலும், 82 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். கிட்டத்தட்ட 80 சதவீத நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை.
பாமகவில் மோதல்
இதனால் பாமக முழுக்க முழுக்க அன்புமணியின் பக்கம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அக்கட்சியின் கவுரவத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் பேசியதில், பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது.
கட்சிக்குள் சலசலப்பு வருவது இயல்புதான். இது விரைவில் சரியாகும். ஊடகங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம். ராமதாஸ், அன்புமணி இடையேயான பிரச்சினையை தீர்க்க இரவு பகலாக முயற்சிக்கிறேன்.
ராமதாஸ் - அன்புமணி இருவரும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளது. ராமதாஸ் - அன்புமணி இடையே கூட்டணி தொடர்பாக எந்த மோதலும் இல்லை. பாமகவில் விரைவில் சுமூக தீர்வு ஏற்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.